close
Choose your channels

ஒரு பதிவிற்கு கோடிக்கணக்கில் சம்பளமா? அசர வைக்கும் சினிமா பிரபலங்கள்!

Thursday, February 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா துறையில் பிரபலமாக இருந்துவரும் பல நட்சத்திரங்கள் சமூகவலைத் தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய செயலி மூலம் தங்களுடைய ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது, தங்களுடைய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதைத்தாண்டி ஒருசில பிரபலங்கள் சோஷியல் மீடியாக பக்கங்களில் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு அதிலும் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சில பாலிவுட் பிரபலங்கள் அதற்கு  வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் மட்டுமல்லாது தற்போது ஹாலிவுட் அளவிற்கு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவரை 73.8 பில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதனால் நடிகை பிரியங்கா பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் கிட்டத்தட்ட 1.8 கோடி சம்பளம்  வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரண்டாவது இடத்தில் பாலிவுட் பியூட்டி என அழைக்கப்படும் நடிகை தீபிகா படுகோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 64.1 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அடுத்து பாலிவுட்டின் கிங்க் என அழைக்கப்படும் நடிகர் அக்சய் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 59.3 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஏறக்குறைய 1 கோடி சம்பளம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த நிலையில் நடிகை ஆலியா பட் இருக்கிறார். அவரை 58.7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடரும் நிலையில் இவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஏறக்குறைய 1 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த பாலிவுட்டின் முன்னணி நடிகரான நடிகர் ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.9 பாலோயர்களைக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஷாருக் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.