close
Choose your channels

100 எபிசோட் சீரியலில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத 'குக் வித் கோமாளி' அஸ்வின்!

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015 ஆம் ஆண்டு 100 எபிசோடு உள்ள சீரியல் ஒன்றில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத அஸ்வின், அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு 90 எபிசோடு கொண்ட சீரியலில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத அஸ்வின், ஒரு சில வாரங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய புகழை அடைந்துவிட்டார்

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள குக்’களும் சரி, கோமாளிகளும் சரி வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே, புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அஸ்வின் கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ரெட்டைவால் குருவி’ என்ற சீரியலில் நடித்து இருக்கிறார். இந்த சீரியல் 100 எபிசோட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2017 ஆம் ஆண்டு ’நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற சீரியலில் நடித்து இருக்கிறார். இந்த சீரியலும் 90 எபிசோடு வரை ஒளிபரப்பானது

அதுமட்டுமின்றி ’ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ் விக்ரம் அண்ணனாகவும், லாஸ்லியா உடன் ஒரு விளம்பரப் படத்திலும் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் அஸ்வினை வேற லெவலுக்கு கொண்டு போய் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அஸ்வின் இந்த நிகழ்ச்சியில் பிரபலமாக ஷிவாங்கியும் ஒரு காரணம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.