close
Choose your channels

'குக் வித் கோமாளி' பிரபலம் அஸ்வின் நடிக்கும் படத்தின் டைட்டில்!

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது, என்பதும் இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலமடைந்தனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள் என்பதையும் அப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் டிரைடண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ’என்ன சொல்ல போகிறாய்’ என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும், ரிச்சர்ட்ஸ் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ’குக் வித் கோமாளி’ புகழ் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.