close
Choose your channels

சி.வி.குமாரின் அடுத்த படத்திற்கு ஹாலிவுட் பட டைட்டில்

Thursday, December 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து இயக்கிய 'மாயவன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி வசூல் சாதனை செய்த 'டைட்டானிக்' படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. M.ஜானகிராமன் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கின்றார். ராட்கிருஷ் படத்தொகுப்பில் ராம்பிரசாத் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் கலையரசன் முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியான ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.