close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படத்தில் இணைந்த இரு வில்லன்கள்

Thursday, September 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மனிதன்' வெற்றிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தை 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல வில்லன் நடிகர்களான ஆர்.கே சுரேஷ் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தில் இருவரும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் உதயநிதி ஸ்டார்லின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை தளபதிபிரபு இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.