close
Choose your channels

நட்சத்திர கிரிக்கெட் வதந்திக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி

Tuesday, April 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியால் நடிகர் சங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இந்த நஷ்டத்திற்காக தமிழக மக்கள் வருத்தப்பட வேண்டும் என்றும் தனுஷ் கூறியதாக ஒரு தகவல் சமூக இணையதளங்களில் சற்று முன்னர் வலம் வந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். நட்சத்திர கிரிக்கெட் போட்டி குறித்து தான் எவ்வித கருத்தையும் பதிவு செய்யவில்லை என்றும் தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி யாரோ தெரிவித்த கருத்துதான் அது என்றும் கூறியுள்ளார்.
இதனால் கடந்த சில மணி நேரமாக தனுஷ் கூறியதாக சொல்லப்பட்ட கருத்து குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.