close
Choose your channels

தனுஷின் 'அசுரன்' படத்தின் சூப்பர் அப்டேட் அறிவிப்பு

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் எதிர்பாராத காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தனுஷ் ரசிகர்களை குளிரிவிக்க சற்றுமுன் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான ‘அசுரன்’ படத்தின் சூப்பர் அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.

‘அசுரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன் தனுஷ் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி இந்த படத்தின் டிரைலர் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தாமதத்தால் சோர்ந்து போயிருந்த தனுஷ் ரசிகர்களுக்கு இது உண்மையிலேயே சூப்பர் அப்டேட் தான் என்பதில் சந்தேகமில்லை.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.