close
Choose your channels

தனுஷூடன் மீண்டும் இணைந்த 'அசுரன்' நடிகர்!

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் தனுஷின் 'வாத்தி’ படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் தனுஷின் மகன்களில் ஒருவராக நடித்தவர் பிரபல காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் தற்போது நடித்து வரும் ’வாத்தி’ என்ற தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் கென் கருணாஸ் மீண்டும் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அசுரன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக தனுஷுடன் கென் கருணாஸ் இணைந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.