close
Choose your channels

ஜெயலலிதா இல்லம் அருகே தனுஷின் புதிய வீடு: பூமி பூஜையில் ரஜினி!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதா இல்லம் அருகே தனுஷ் கட்ட உள்ள புதிய வீட்டிற்கான பூமி பூஜை இன்று நடந்த நிலையில் இந்த பூமி பூஜையில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

ஜெயலலிதா இல்லம் இருக்கும் போயஸ் கார்டனில் தனுஷ் புதிய வீடு கட்ட போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இன்று அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் அருகே நடிகர் தனுஷ் புதிய வீடு ஒன்றை கட்ட உள்ளார். அந்த வீட்டிற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த வீடு மிக விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் விரைவில் இந்த புதிய வீட்டிற்கு தனுஷ் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது.

இன்று நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட ரஜினியின் புகைப்படத்தில் அவர் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து ரஜினி ரசிகர்கள் பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.