close
Choose your channels

'கொடி'யை அடுத்து தனுஷை நோக்கி வரும் 'பாயும் தோட்டா'

Thursday, February 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் 'கொடி' படத்தில் முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் அரசியல்வாதியாக நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.


இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்தை இயக்குவது வெற்றிமாறனா? அல்லது கெளதம் மேனனா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது தனுஷ் இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்

எனது அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்று தனுஷ் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனுஷின் அடுத்த படம் எது என்ற கேள்விக்கு அதிகாரபூர்வ விடை கிடைத்துள்ளது.

சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் பணிகளை முடித்த பின்னர் கவுதம் மேனன் இந்த படத்தை தொடங்குவார் என்றும் இதுவொரு குறுகிய கால தயாரிப்பு என்றும் இந்த படத்தை முடித்தவுடன் கவுதம்மேனன், ஜெயம் ரவி நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.