close
Choose your channels

மணிரத்னம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் தயாரித்த ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி உள்ளது.

’வானம் கொட்டட்டும்’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் அவர்களை மீண்டும் ஒரு தயாரிப்பாளராக பார்ப்பதில் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் இந்த படம் வெற்றியடைய இயக்குனர் தனா அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த டீசரில் இந்த திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல், மதுசூதன ராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தனா இயக்கியுள்ளார். சித் ஸ்ரீராம் இசையில் ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவில் சங்கத்தமிழன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.