close
Choose your channels

யுவன்ஷங்கர் ராஜாவுக்கு தனுஷின் தரமான சம்பவம்!

Saturday, August 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு காமன் டிபி போஸ்டர் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. முதலில் அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே காமன் டிபி போஸ்டர் வெளியிட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் காமன் டிபி போஸ்டர் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாள் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அவருடைய காமன் போஸ்டரும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

யுவன் சங்கர் ராஜாவின் காமன் டிபி போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து யுவனின் ரசிகர்கள் ’தனுஷ் செய்த தரமான சம்பவம் இது’ என்று கமென்ட் பகுதிகளில் பதிவு செய்து வருகின்றனர். அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ள யுவனின் காமன் டிபி போஸ்டர் தற்போது சமூக வலை தங்களின் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ ’காதல் கொண்டேன்’ ’புதுப்பேட்டை’ ’யாரடி நீ மோகினி’ ’மயக்கமென்ன’ ’மாரி 2’ போன்ற படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.