close
Choose your channels

'லியோ' படத்தை விஜய் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா? மிஷ்கின் சொன்ன முக்கிய தகவல்..!

Saturday, September 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் ’லியோ’ படத்தை பார்த்து விட்டதாகவும் நானும் இன்னும் ஒரு சில தினங்களில் பார்க்க இருக்கிறேன் என்றும் ’லியோ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பிரபல இயக்குனருமான மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ’லியோ’ படம் குறித்த சில கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் விஜய் ஏற்கனவே ’லியோ’ படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னதாகவும் கூறினார்.

மேலும் இந்த திரைப்படம் மாஸ் படமாக உருவாகியுள்ளது என்றும் கண்டிப்பாக தியேட்டரில் இந்த படம் பட்டையை கிளப்பும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இன்னும் ஒரு சில தினங்களில் நானும் ’லியோ’ படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். ’லியோ’ படத்தில் விஜய்க்கு முக்கிய வில்லனாக தன்னுடைய கேரக்டர் அமைந்திருக்கிறது என்றும் கண்டிப்பாக இது ஒரு நல்ல ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இயக்குனர் மிஷ்கின் கூறிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.