close
Choose your channels

இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவும் நயனும் நடிக்கவே இல்லை : பாண்டிராஜ்

Wednesday, May 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, நயன்தாரா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பாண்டியராஜ் கூறியபோது, 'சிம்புவும் நயன்தாரா இந்த படத்தில் நடித்ததுபோலவே இருக்காது. அவர்கள் இருவருடைய சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் ஆகிய அனைத்திலும் ஒரு இயல்பு நிலை இருந்ததாகவும், இந்த படத்தின் முதுகெலும்பாக சிம்பு, நயனின் லவ் கெமிஸ்ட்ரி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியபோது, "ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதின் தேடல்தான் இந்த படம். 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் என சம அளவில் கலந்திருக்கும் இந்த படத்தில் நாயகன் சிம்புவுக்கும் நாயகி நயன்தாராவிற்கும் நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் இருந்தது.

மேலும் இதுவரை ரசிகர்கள் சிம்பு-சந்தானம் காமெடியை வெகுவாக ரசித்திருந்த நிலையில் முதல்முறையாக சிம்பு-சூரியின் காமெடியை ரசிப்பார்கள். எது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியும் இல்லாமல், ஒரு மாதிரியா இருக்கும் படம்தான் 'இது நம்ம ஆளு' என்று கூறி முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.