close
Choose your channels

தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி-விக்ராந்த் கேரக்டர்கள் என்ன?

Sunday, December 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


சமுத்திரக்கனி நடிக்கவுள்ள 'தொண்டன்' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் தலைப்புக்கேற்றவாறு ஒரு அரசியல் படம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறும்போது, 'இது அரசியல் கலந்த படமாக இருந்தாலும் ஒரு எளிமையான மனிதன் பிரச்சனைகள் மற்றும் வலியோடு பயணிக்கும் கதை. குறைந்த வருமானம் பெற்ற போதிலும், நிறைந்த மன திருப்தியுடன் குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறை உள்ள ஒரு தொண்டனின் கதைதான் 'தொண்டன்' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் டிரைவராகவும், விக்ராந்த் ஆம்புலன்ஸ் அட்டெண்டராகவும் நடிக்கவுள்ளனர். ஐந்து முக்கிய கேரக்டர்களுடன் ஒருசிறிய நகரத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகவுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்ப்பு வரும் 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.