close
Choose your channels

மேக்கப் இல்லாமல் 'கங்குவா' நாயகியின் போட்டோஷூட்.. குவியும் லைக்ஸ்..!

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக், மெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் திஷா பதானி ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் பாலிவுட்டில் ’யோதா’ என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் ’ப்ராஜெக்ட் கே’ என்ற திரைப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானிக்கு 57 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் மேக்கப் இன்றி கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.