close
Choose your channels

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் நட்சத்திர தம்பதியின் மகள்!

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகளின் மகள் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா என்ற நட்சத்திர தம்பதிகள் பல திரைப்படங்களில் இணைந்தும் தனித்தனியாகவும் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ராஜசேகர் ஜீவிதா தம்பதியின் இளைய மகள் ஷிவத்மிகா என்பவர் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருக்கிறார்

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கவிருக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் ஷிவத்மிகா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் சேரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட இடைவேளைக்குப்பின் குடும்பத்துடன் இணையும் ஒரு இளைஞனின் கதையம்சம் தான் இந்த திரைப்படம் என்றும் கிட்டத்தட்ட கார்த்திக் நடித்த ’வருஷம் 16’ திரைப்படத்தின் கதையை போன்றது தான் இந்த படத்தின் கதையை என்றும் நந்தா பெரியசாமி கூறியுள்ளார்

கௌதம் கார்த்திக்கின் மாமாவாக சேரன், தங்கையாக விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மேலும் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சரவணன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் நந்தா கூறியுள்ளார்

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு சித்துகுமார் என்பவர் இசை அமைக்க இருப்பதாகவும் இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.