close
Choose your channels

விஜய் தேவரகொண்டாவுக்காக பாடகராக மாறிய பிரபல நடிகர்!

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸாக திட்டமிடப்பட்டிருப்பதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்காக புதிய பாடல் ஒன்று தற்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த பாடலை பாடியவர் பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான். விஜய் தேவரகொண்டாவிற்காக அவர் இந்த பாடலை பாடியுள்ளதாகவும் இந்த பாடல் மிக நன்றாக வந்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருவரும் 'மகாநதி' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான இந்த படத்தை பரத் கம்மா இயக்கியுள்ளார். ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.