close
Choose your channels

மின்வெட்டு குறித்து ட்விட் போட்ட திரையுலக பிரபலம்.. உடனடியாக பதிலளித்த அமைச்சர்..!

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு குறித்து திரை உலக பிரபலம் ஒருவர் தனது ட்விட்டரில் ட்விட் போட்ட நிலையில் உடனடியாக அதற்கு மின்வாரியத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆன பிசி ஸ்ரீ ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு வருவதாகவும், என்ன நடக்கிறது மின்சாரதுறையில்? என்றும் பதிவு செய்திருந்தார்.

இந்த ட்விட்டிற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ’இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். பொதுவாக சென்னை முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே அதில் குறைந்தபட்ச இடையூறு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பி.சி ஸ்ரீராம் ட்வீட்டுக்கு உடனடி பதில் அளித்ததோடு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.