close
Choose your channels

தீபாவளியில் 'அண்ணாத்த'வுடன் மோதும் 3 படங்கள்!

Friday, October 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் அறிவிப்பு வெளியாகி கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே தீபாவளியன்று சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் அருண் விஜய் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த ’வா டீல்’ என்ற திரைப்படமும் தீபாவளியன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அதிரடியாக விஷால் மற்றும் ஆர்யா நடித்த ’எனிமி’ திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ’எனிமி’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு விட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி ரேஸில் முந்த போகும் படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.