close
Choose your channels

'எதிர்நீச்சல்' நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்ஜே சூர்யா அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு ’கண்ணும் கண்ணும்’ 2014 ஆம் ஆண்டு ’புலிவால் ஆகிய படங்களை இயற்றினார். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’ஜெயிலர்’ படத்தில் கூட அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் அவர் நடித்து வந்தார் என்பதும் இந்த சீரியலில் அவர் குணசேகரன் என்ற கேரக்டரில் நடிப்பில் கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 8.30 து மணிக்கு திடீரென அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை உலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.