close
Choose your channels

ஷாலினி அஜித் சகோதரிக்கு பாராட்டு தெரிவித்த வெளிநாட்டினர்.. என்ன காரணம் தெரியுமா?

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாலினி அஜித்தின் சகோதரியின் படைப்பு திறமையை வெளிநாட்டினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலி ஒரு நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கிய ’அஞ்சலி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பாக நடித்த அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் ’துர்கா’ ’தைப்பூசம்’ ’செந்தூர தேவி’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பதும் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிப்பு மட்டும் இன்றி ஷாமிலிக்கு ஓவியம் வரைவதிலும் பெரிய மிகப்பெரிய அளவில் விருப்பம் உண்டு. ஏற்கனவே அவர் தான் வரைந்த ஓவியங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் நடந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் ’வேர்ல்ட் ஆப் துபாய்’ என்னும் சர்வதேச ஓவியக்கலைக்கூடத்தில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி இருந்தார். அவரது ஓவியங்களை பார்த்த வெளிநாட்டினர் பலர் அவரது படைப்புகளை பாராட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.