close
Choose your channels

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால்: பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்!

Wednesday, August 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தான் நடிக்கும் படத்திற்காக மேக்கப் போடும்போது கூட கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை Gal Gadot. இவர் ’வொண்டர் வுமன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று இருந்தார். அப்போது அவர் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது கூட அவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டிலில் தாய்ப்பாலை எடுத்துக் கொண்டிருந்தார்.

இதுகுறித்த புகைப்படம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’வேலையில் இருந்தாலும் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய கடமை இது’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமானவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் ஒரு சிறந்த தாய் என்றும், நீங்கள் Wonder Woman இல்லை Wonder Wo-mom' என்பது உள்பட பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு சுமார் 20 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.