close
Choose your channels

தாய் கவுதமி மடியில் மகள் சுப்பு.. வைரலாகும் கார்த்திகை தீப கொண்டாட்ட புகைப்படம்

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாய் கவுதமி மடியில் அவரது மகள் சுப்புலட்சுமி உட்கார்ந்திருக்கும் கார்த்திகை தீப கொண்டாட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராமராஜன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கவுதமி என்பதும் அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் கடந்த 1998ம் ஆண்டு சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்ட கவுதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார் என்பதும் திருமணமான ஒரே வருடத்தில் கவுதமி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தநிலையில் கவுதமியின் மகள் சுப்புலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகும்.

இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கார்த்திகை தீப நிகழ்ச்சியை கொண்டாடிய புகைப்படங்களை கவுதமி மகள் சுப்புலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் கவுதமி மடியில் சுப்புலட்சுமி உட்கார்ந்து இருப்பது போன்று இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த நிலையில் நடிகை கவுதமி பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’துப்பறிவாளன் 2’ மற்றும் ‘ஷாகுந்தலம்’ உள்பட ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.