close
Choose your channels

கமல், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகைக்கு பாஜகவில் பதவி?

Wednesday, January 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், ராமராஜன், உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கௌதமிக்கு விரைவில் பாஜகவில் பதவி வழங்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ என்ற படத்தில் நடித்த பிறகு கௌதமிவேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அவர் தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை கௌதமிக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் பாஜகவின் தமிழக தலைவர் பதவியை நிரப்பப்படும் என்றும் அதன்பின்னர் கௌதமிக்கான பதவி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடை பெறுவதை அடுத்து கௌதமியை தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.