close
Choose your channels

சமுத்திரக்கனின் 'ஆண் தேவதை' இசையமைப்பாளர் அறிவிப்பு

Saturday, October 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்த ஒரே படமான 'ரெட்டைச்சுழி' படத்தை இயக்கிய இயக்குனர் தாமிராவின் அடுத்த படம் 'ஆண் தேவதை' என்றும், இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ஜோக்கர்' நாயகி ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஜிப்ரான் தற்போது சிங்கப்பூர் வரை காரில் பயணம் செய்யும் சுற்றுப்பயணத்தில் உள்ளதாகவும், அவர் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் இசையமைப்பு பணியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.