close
Choose your channels

கில்லி முதல் மெர்சல் வரை: தளபதி விஜய்யின் வசூல் வளர்ச்சி

Thursday, November 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவருடைய படங்களின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் ஓப்பனிங் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதே அவரது மேஜிக். படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ் என்றால் வசூல் மழை நிச்சயம்

கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'கில்லி' திரைப்படம் தான் தளபதி விஜய்யின் முதல் வசூல் மைல்கல். இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்பே இந்த படம் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது. ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் விஜய் படம் என்ற பெருமையையும் பெற்றது.

அதேபோல் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயற்றிய 'துப்பாக்கி' திரைப்படம் விஜய்யின் முதல் ரூ.100 கோடி படமாக அமைந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் விஜய், முருகதாஸ் இருவருக்குமே மறக்க முடியாத படம் ஆகும்

இதனையடுத்து அட்லி இயக்கிய இரண்டாவது படமான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்து கோலிவுட் திரையுலகை வியக்க வைத்தது. ரஜினிக்கு அடுத்து பாக்ஸ் ஆபீஸ் மிஷின் விஜய் தான் என்பது இந்த படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

தற்போது கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்த 'மெர்சல்' படம் ரூ.250 கோடி என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பாக்ஸ் ஆபீச் வசூலில் படிப்படியாக முன்னேறி வரும் தளபதி விஜய் அடுத்த படத்தில் ரூ.500 கோடி வசூலை தொடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.