close
Choose your channels

பொண்ணை தானே ரூமுக்கு கூப்பிட்டாரு? இதில என்ன தப்பு: வைரமுத்து விவகாரம் குறித்து பிரபல நடிகர்

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி வைரமுத்து மீது இன்னும் ஒருசில பெண்களும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபல குணசித்திர நடிகர் ஜி.மாரிமுத்து, 'வைரமுத்து ஒரு ஆம்பள, அவர் ஒரு பொண்ணை படுக்கைக்கு கூப்பிட்டதில் என்ன தவறு உள்ளது. அவர் ஒரு ஆணை கூப்பிட்டிருந்தால்தான் தப்பு. இஷ்டமிருப்பவர்கள் படுக்கைக்கு வருவார்கள், இஷ்டம் இல்லாதவர்கள் இதுபோல் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்கள்.

இந்த விஷயத்தால் வைரமுத்துவின் புகழுக்கு சிறிதளவுகூட இழுக்கு வர வாய்ப்பில்லை. அவர் தமிழுக்காக செய்த தொண்டுகள் ஏராளம். வைரமுத்து விவகாரம் இன்னும் சில நாட்களில் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை' என்று கூறியுள்ளார்.

ஜி.மாரிமுத்துவின் இந்த கருத்துக்கு பலர் கண்டனங்களையும், ஒருசிலர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.