close
Choose your channels

விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' ஓப்பனிங் வசூல் எப்படி?

Monday, June 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'கோலி சோடா 2' படத்திற்கு ஊடகங்களும், சமூக இணையதளங்களும் நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து கடந்த வாரயிறுதி நாட்களில் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

சென்னையில் இந்த படம் 18 திரையரங்க வளாகங்களில் 159 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.45,81,353 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் பார்வையாளர்கள் 80% இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் கடந்த 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் சென்னயில் ரூ.57,07,705 வசூல் செய்துள்ளது.

மேலும் கடந்த வாரம் 'கோலி சோடா 2' படத்திற்கு போட்டியாக வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் வரும் வெள்ளி வரை இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.