close
Choose your channels

தனுஷ் பட தள்ளிவைப்பால் ஜிவி பிரகாஷூக்கு கிடைத்த வழி!

Thursday, September 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் வெள்ளியன்று அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ஆர்யாவின் ‘மகாமுனி’, ஜிவி பிரகாஷ் - சித்தார்த்தின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் யோகிபாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் சரியான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் நாளை வெளியாகவிருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறொரு தேதியில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து நாளைய ரிலீசில் இருந்து ஒதுங்கிய ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு வழி கிடைத்துள்ளது. ஆம் சற்றுமுன் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் நாளை வெளியாகும் என்றும் இந்த செய்தியை அனைவருக்கும் பரப்புங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சித்தார்த், ஜிவி பிரகாஷ், லிஜோமால் ஜோஸ், காஷ்மீரா பர்தேஷி, தீபா ராமானுஜம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார், ’பிச்சைக்காரன்’ இயக்குனர் சசி இயக்கியுள்ள இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.