close
Choose your channels

இனி ஒவ்வொரு தமிழனோட ஓட்டும் ஒரு தமிழனுக்கு தான் விழனும்: ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' டிரைலர்..!

Monday, March 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ என்ற திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக மமீதா பாஜு நடித்துள்ள இந்த படத்தில் கல்லூரி வினோத், சுப்பிரமணிய சிவா, ஆதித்ய பாஸ்கர், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தின் டிரைலரில் ஆரம்பத்தில் கல்லூரி கால காட்சிகளும், கல்லூரி காதலும் இனிமையாக இருக்கும் நிலையில் திடீரென ஒரு பிரச்சனை வந்து அதனால் வன்முறை களமாக மாறும் கதை அம்சம் கொண்டதாக உள்ளது

இந்த படம் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ’ஒரு தமிழனாக பிறந்தது தப்பா’ ’இனி ஒவ்வொரு தமிழனின் வாக்குகளும் ஒரு தமிழனுக்கு தான் விழனும்’ போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்கின்றன.

கேரளாவில் ஒரு கல்லூரியில் ஒரு தமிழ் பையன் படித்தால் ஏற்படும் பிரச்சனைகள், சந்திக்கும் சவால்கள் தான் இந்த படத்தில் இயக்குனர் காட்சிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.