close
Choose your channels

மீண்டும் ரஜினி டைட்டில் படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

Friday, June 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா' மற்றும் வாட்ச்மேன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு மட்டும் வெளியாகியுள்ளது. மேலும் அவர் நடித்து முடித்துள்ள '100% காதல்', 'ஐங்கரன்', 'அடங்காதே', 'ஜெயில்' ஆகிய திரைப்படங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கி வரும் ஒரு படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் கனல் கண்ணன் இந்த படத்தின் டைட்டில் 'ஆயிரம் ஜென்மங்கள்' என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த டைட்டில் விரைவில் அதிகாரபூர்வமாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' திரைப்படம் ரஜினி பட டைட்டிலாக இருந்த நிலையில் தற்போது 'ஆயிரம் ஜென்மங்கள்' டைட்டிலும் ரஜினி பட டைட்டிலாக அவருக்கு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1978ஆம் ஆண்டு ரஜினிகாந்த், லதா நடித்த த்ரில் திரைப்படம் 'ஆயிரம் ஜென்மங்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.