close
Choose your channels

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் அஜீத்-சூர்யா-விக்ரம் நாயகி?

Friday, July 31, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பென்சில் மற்றும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரு படங்களும் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் பாண்டியராஜ் உதவியாளர் பிரசாந்த் இயக்கத்தில் 'புரூஸ் லீ' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.


இதன்படி இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சமந்தா தற்போது விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி 2', சூர்யாவுடன் '24', மகேஷ்பாபுவுடன் 'பிரமோத்சவம்' ஆகிய படங்களில் அட்லி இயக்கும் 'விஜய் 59' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனுஷுடன் 'வடசென்னை' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.