close
Choose your channels

பனிமலையில் ஹாயாக படுத்திருக்கும் தமிழ் நடிகை! வைரல் புகைப்படங்கள்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா அதன்பின்னர் தளபதி விஜய்யின் ’வேலாயுதம்’ சிவகார்த்திகேயனின் ’மான் கராத்தே’ சூர்யாவின்’ சிங்கம் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ஹன்சிகா தற்போது அவர் ’மஹா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இது அவருடைய 50வது திரைப்படம் என்பதும் இந்த திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் அசத்தலான புகைப் படங்களை பதிவு செய்து வரும் ஹன்சிகா சமீபகாலமாக நீச்சல் உடை உள்ளிட்ட கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது பனிமலையில் பனிச்சறுக்கு செய்யும் புகைப்படங்களையும் பனிமலையில் ஹாயாக படுத்திருக்கும் புகைப்படங்களையும் பதிவுசெய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.