close
Choose your channels

கோலிவுட்டின் 'நண்பன்' சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Wednesday, September 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சசிகுமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கோலிவுட் திரையுலகில் 'நண்பன்' கதை கொண்ட திரைப்படம் என்றாலே கூப்பிடு சசிகுமாரை என்று கூறப்படும் அளவுக்கு அவருடைய பெரும்பான்மையான படங்கள் நட்பின் பெருமையை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது.
சுப்பிரமணியபுரம்' என்ற மாபெரும் முதல் வெற்றிக்கு பின்னர் அவருடைய நெருங்கிய நண்பர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நாடோடிகள்' படமும் பெரிய வெற்றியை பெற்றது. ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைப்பதற்காக சசிகுமார் உள்பட மூன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைக்கும் கதையம்சம் கொண்ட இந்த படம் நட்புக்கும் நல்ல இலக்கணமாக அமைந்தது.
இதன் பின்னர் ஈசன், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி என சசிகுமாரின் திரையுலக வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

நடிகர், இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சசிகுமார் வெற்றி பெற்றுள்ளார். இவர் தயாரித்த ''பசங்க' தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வம்சம், போராளி ஆகிய படங்களில் பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் திரையுலகில் அனைவருக்கும் நண்பராக இருப்பதோடு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என வெற்றிகரமாக வலம் வரும் சசிகுமார் இன்னும் பல வெற்றிகளை குவித்து திரையுலகிற்கு பெருமை தேடி தர இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒரு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.