close
Choose your channels

பட்டு வேட்டிச் சட்டையில் லெஜெண்ட் பாடகர்கள்! வைரல் புகைப்படம்!

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி எனப் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்த்து வருபவர் பாடகர் ஹரிஹரன். இவர் மேடை ஏறிவிட்டாலே ரசிகர்கள் மனதில் உற்சாகம் குடிகொண்டு விடும். அதோடு பாடகர் ஹரிகரனின் ஹேர் ஸ்டைல், வித்தியாசமான உடை அலங்காரத்திற்கும் தனி மவுசு உண்டு. இத்தனை பெரிய லெஜெண்ட் தற்போது அரண்மனை 3 படத்தில் லைவ்வாக பாடல் பாடவுள்ளார். இதனால் ஒரே நேரத்தில் அந்தப் படத்தின் நடிகராகவும் நம்மால் பார்க்க முடியும் .

இவரோடு சேர்ந்து திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர், பாப்பிசை என தமிழ், ஹிந்தி சினிமா உலகில் கொடிக்கட்டி பறந்துவரும் பாடகர் சங்கர் மகாதேவனும் சேர்ந்து அரண்மனை 3 படத்தில் பாடல் பாட உள்ளார். இவர்களின் கூட்டணி இசைக்கும் லைவ் நடிப்பிற்கும் அரண்மனை 3 படத்தின் இயக்குநர் சுந்தர்.சி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு உள்ள அந்தப் பதிவில் சங்கர் மற்றும் ஹரிஹரன் இருவரும் பட்டு வேட்டிச் சட்டை அணிந்து உள்ளனர். இதுவரை இந்தக் கெட்டப்பில் ஹரிஹரனை பார்த்திராத ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். அதோடு இந்தக் கூட்டணி மெகா வெற்றிப்பெறும் எனவும் சிலர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

What a pleasure and honor to have two legends @SingerHariharan and @Shankar_Live on board for our prestigious project #Aranmanai3 as actors, performing for their songs. Thank you so much for agreeing to be with us. #SundarC ❤❤❤❤❤???????? pic.twitter.com/XSCEYjcgmd

— KhushbuSundar ❤️ (@khushsundar) January 29, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.