close
Choose your channels

அஜித் படத்தை பார்க்க பயந்தேன்: பாடகி சின்மயி

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்க்க பயந்தேன் என்றும் என்று பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’நேர் கொண்ட பார்வை’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் பெண்களை ஆண்கள் எப்படி நடத்தவேண்டும், சமூகம் பெண்கள் மீதான பார்வையை எப்படி மாற்றவேண்டும் என்பது குறித்து அழுத்தமான பதிவு தான் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நான் ஒரு சராசரியான திரைப்பட ரசிகை. எனக்கு மகிழ்ச்சியான திரைப்படங்கள் பிடிக்கும். எனக்குக் கடினமான, சோகமான படங்களைப் பார்ப்பது மிகக் கடினம். 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தைப் பார்க்க பயந்து கொண்டிருந்தேன் ஏனென்றால் பார்க்கக் கடினமாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், ஒருவழியாக தைரியம் வந்து நேற்றிரவு படத்தைப் பார்த்தேன்.

ஒரு நல்ல செய்தி இவ்வளவு நுணுக்கத்துடன் சொல்லப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். படக்குழுவுக்கு எனது அன்பு. அஜித் போன்ற பெரிய நடிகர்கள் இப்படியான நுணுக்கமான, முற்போக்கான படங்களில் நடிப்பது மனநிறைவைத் தருகிறது. இந்தச் செய்தியை இன்னும் பெரிய அளவு கொண்டு போக அவர் உதவியாய் இருப்பார். பலரை யோசிக்க வைத்து, கேள்வி கேட்கவைத்து, புரிந்துகொள்ள உதவியிருப்பார் என நம்புகிறேன். இதன் ரீமேக்கில் பவன் கல்யாண் தெலுங்கில் நடிக்கிறார் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி.

'நேர்கொண்ட பார்வை', 'டியர் காம்ரேட்', 'ப்ரோச்சேவாரெவருரா' போன்ற படங்களை எழுதும் கதாசிரியர்கள், இயக்கும் இயக்குநர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். உங்களது புரிதலுக்கும், அணுகுமுறைக்கும் மிக்க நன்றி. அப்படியான சூழல்களில் நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை மாற்ற உங்களைப் போன்ற கூட்டாளிகள் இருப்பது உதவிகரமாய் இருக்கிறது".

இவ்வாறு சின்மயில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.