close
Choose your channels

நான் பாஜகவில் இணைகின்றேனா? விஷால் விளக்கம்

Sunday, September 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் விரைவில் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சமீபத்தில் பாஜகவின் ஆதரவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கங்கனா ரனாவத்தை நடிகர் விஷால், பகத்சிங்கிற்கு இணையாக ஒப்பிட்டத்தை அடுத்தே, அவர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். நான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக கருதப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos