close
Choose your channels

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

Sunday, March 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு படக்குழுவினர் விறுவிறுப்பாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றை வெளியிடும் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவான 'விளம்பர இடைவெளி' என்று தொடங்கும் பாடல் நாளை அதாவது மார்ச் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இதனை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது

நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.