close
Choose your channels

அஜித்தின் 'விடாமுயற்சி' விபத்து வீடியோ.. ஐபிஎஸ் அதிகாரி சொன்ன அறிவுரை..!

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்து குறித்த வீடியோ நேற்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த வீடியோ குறித்து சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் அஜித்தின் மேனேஜர் இது குறித்து விளக்கம் அளித்த போது ’ரசிகர்களுக்காக ஒரு நடிகர் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கிறார், அதில் இருக்கும் உழைப்பு ரசிகர்களுக்கு தெரிந்தால் படத்தின் டீமுக்கும் தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்பதால் தான் இந்த வீடியோவை வெளியிட்டோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விபத்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ குறித்து ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ’வாகனத்தில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அவசியம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அஜித் சீட் பெல்ட் அணிந்துள்ளார் என்பதும் அவரது அருகில் உட்கார்ந்திருந்த ஆரவ் தான் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததை சுட்டிக்காட்டியே ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் இவ்வாறு பகிர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் அவர்களின் இந்த பதிவுக்கு ஏராளமான அஜித் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos