close
Choose your channels

'விக்ரம் வேதா' படத்துடன் கனெக்சன் ஆகும் சூர்யா-சுதா படம்

Sunday, September 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்ப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன விஜய்சேதுபதி-மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களில் சூர்யா முதலில் எதை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.