close
Choose your channels

'இருட்டு அறைக்கு' கிடைத்த எதிர்பார்த்த சென்சார் சான்றிதழ்

Wednesday, March 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான அடல்ட் காமெடி படமான 'ஹர ஹர மகாதேவகி ' படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரின் அடுத்த படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்தது என்பதை பார்த்தோம்

இந்த படமும் அடல்ட் காமெடி படமாகத்தான் உருவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்தது போலவே சென்சாரில் A சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஸ்டிரைக் முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பாலு ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.