close
Choose your channels

விஜய்யின் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளாரா?

Friday, August 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் 'சிங்க பெண்ணே' பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த பாடலை யூடியூபில் லட்சக்கணக்கானோர் பார்த்து புதிய சாதனை புரிந்துள்ளனர். மேலும் இந்த பாடலின் வீடியோவில் ஏஆர் ரஹ்மான் தோன்றினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிகில் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் ஏஆர் ரகுமான் நடித்துள்ளதாகவும், தமிழ் படத்தில் ஏஆர் ரஹ்மான் நடிப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் விஜய் மற்றும் ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு முன்னர் அலியாபட் நடித்த 'ஹைவே' உள்பட ஒருசில பாலிவுட் படங்களில் தோன்றியுள்ளார் என்பது தெரிந்ததே

விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.