close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? பாடல் எழுதுகிறாரா?

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அதன் பிறகு அவர் நடிக்கவில்லை பாடல் மட்டுமே எழுத இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன் லால், சுனில், ஜாக்கிஷெரப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணா ஆகிய முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் சமீபத்தில் வந்த செய்தியின் படி சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் பாடல் மட்டுமே எழுத இருப்பதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வைரல் ஆனது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இது குறித்து விளக்கம் அளித்த போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தான் நடிக்கவும் இல்லை, பாடல் எழுதவும் இல்லை என்றும் இது குறித்து வெளியாகும் தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவான படங்களிலேயே ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்றும் அந்த பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.