close
Choose your channels

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு: வீடியோ வைரல்

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயம்ரவியின் 30வது படத்தை எம் ராஜேஷ் இயக்க இருப்பதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் தயாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம்ரவியின் இந்த படத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை 29-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.