close
Choose your channels

'8 தோட்டாக்கள்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

Saturday, June 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளம் இயக்குனர்களில் ஒருவர் '8 தோட்டாக்கள்' இயக்குனர் ஸ்ரீகணேஷ். பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் இயக்கிய '8 தோட்டக்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் என்ற நிறுவனம் தற்போது தயாரித்திருக்கும் அடுத்த படம் ''ஜீவி''.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் பணியும் முடிந்துவிட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

'8 தோட்டாக்கள்' நாயகன் வெற்றி இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மோனிகா நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கோபிநாத் இயக்கத்தில் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் பிர்வீன்குமார் ஒளிப்பதிவில் கே.எல்.பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.