close
Choose your channels

தமிழ்ப்புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

Thursday, April 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. திரைப்படத்தின் 'தண்டல்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சூர்யாவின் 'காப்பான்' படத்தின் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து நிச்சயம் என்று கூறியுள்ளார். அனேகமாக 'காப்பான்' படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தமிழ்ப்புத்தாண்டு என்.ஜிகே மற்றும் காப்பான் என இரட்டை விருந்து சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பது உறுதியாகிறது.

சூர்யாவின் 'என்.ஜி.கே' வரும் மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.