close
Choose your channels

நாளை ரஜினி ரசிகர்களுக்கு தாணு தரும் 'கபாலி' பரிசு

Sunday, December 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் அவரது ரசிகர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து நாளை தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரஜினி தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த மிகப்பெரிய ஹிட் படமான 'கபாலி' படத்தின் திரைக்கு வெளிவராத காட்சிகளை நாளை இணையதளத்தில் வெளியிட கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளார். இந்த வருடம் தங்கள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாட முடியாத நிலையில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இந்த வீடியோக்கள் ஆச்சரியமான பரிசாக கருதப்படுகிறது.

இந்த தகவலை 'கபாலி' படத்தின் எடிட்டர் ப்ரவீண் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். நாளை வெளியாகவுள்ள 'கபாலி' வீடியோவுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.