close
Choose your channels

'இந்தியன் 2' நாயகியாகும் அஜித்-விஜய் பட நடிகை

Friday, November 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக கமல்ஹாசன் போட்டோஷூட் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்தூள்ளது. அஜித், விஜய் உள்பட முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு விரைவில் வெளிநாட்டில் மேக்கப் டெஸ்ட் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ஷங்கர் தேர்வு செய்து முடித்துவிட்டதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு படப்பிடிப்பு தொடங்கும் நாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரிய உள்ளதாகவும், எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகிய மூவரும் இணைந்து  வசனங்களை எழுதவுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.