close
Choose your channels

'நாங்களெல்லாம் மணிரத்னத்தோட அசிஸ்டெண்ட்கள்.. காஜல் அகர்வாலின் 'கோஸ்டி' டிரைலர்..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ‘கோஸ்டி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காவல்துறை அதிகாரியான காஜல் அகர்வால் குற்றவாளிக்கு பதிலாக ஒரு அப்பாவியை சுட்டு கொலை செய்து விட அந்த அப்பாவி பேயாக மாறி பழிவாங்கும் கதைதான் ‘கோஸ்டி’ என்பது இந்த ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது.

காமெடி மற்றும் த்ரில் ஆகிய இரண்டும் கலந்த இந்த ‘கோஸ்டி’ திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு காஜல் அகர்வாலை திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் அதேபோல் யோகி பாபுவின் ஒன்லைன் காமெடியும் இதில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தெரியவருகிறது.

ஏற்கனவே ’குலேபகாவலி’ ’ஜாக்பாட்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய கல்யாண இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் காஜல் அகர்வால், கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில், ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவி,ல் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.